Thursday, 31 January 2013

ஓரிடத்தில்

ஓரிடத்தில் 
ஸிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு.
[மலையாளக் கவிதை]
ஓரிடத்தில் 
ஒரு இடமுமில்லாத 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .
காலம் கூட அவர்களிடம் பேசவில்லை 
அதிலோர் ஆள் மேகங்களில் இருந்து வழுக்கி 
பலமுறை வீழ்ந்தான் 
மற்றோர் ஆளோ 
முழுநிலாவில் 
தனித்துப்போனான்.

ஓரிடத்தில் 
ஒருமுடிவுமின்றி 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .
இரவுபகல்கள் கூட 
அவர்களைக் கண்டுகொள்ளாத மாதிரி நடித்தன 
இளங்காற்று மற்றெங்கொ வீசியது 
பனியும் குளிரும் 
எட்டிப்பிடிக்கும் முன்பே 
போய் மறைந்தது 
எனினும் கட்டிமுடியாத 
அந்த பஸ் ஸ்டாப்பில் 
ஒருபோதும் வராத பஸ்ஸை எதிர்பார்த்து 
அதில் ஒருக்காலும் நிகழாத 
இரண்டு காலி இருக்கைகளை எதிர்நோக்கி
ஓரிடத்தில் 
ஒரு இடமுமில்லாத 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .  


ഒരിടത്ത്‌
ഒരിടത്ത്‌ ഒരിടവുമില്ലാതെ
രണ്ടുപേർ സ്നേഹിച്ചിരുന്നു.
സമയം പോലും
അവരോട്‌ മിണ്ടിയില്ല.
അതിലൊരാൾ മേഘങ്ങളിൽ നിന്നു വഴുതി
പലതവണ വീണു
മറ്റേയാളാകട്ടെ,
പൂർണ്ണചന്ദ്രനിൽ
ഒറ്റയ്ക്കായി.

ഒരിടത്ത്‌
ഒരന്തവുമില്ലാതെ
രണ്ടുപേർ സ്നേഹിച്ചിരുന്നു.
രാപകലുകൾ പോലും
അവരെ കണ്ടില്ലെന്നു നടിച്ചു
ഇളംകാറ്റ്‌
മറ്റെങ്ങോ വീശി.
മഞ്ഞും കുളിരും
എത്തിപ്പിടിക്കും മുമ്പേ
പോയി മറഞ്ഞു.
എന്നിട്ടും പണിതീരാത്ത
ആ ബസ്റ്റോപ്പിൽ
ഒരിക്കലും വരാത്ത ബസ്സും കാത്ത്‌
അതിലൊരിക്കലും സംഭവിക്കാത്ത
രണ്ടൊഴിഞ്ഞ സീറ്റും പ്രതീക്ഷിച്ച്‌
അവർ
ഒരിടത്ത്‌
ഒരിടവുമില്ലാതെ
സ്നേഹിച്ചു.
Thanks: namukkidayil.blogspot.com

No comments:

Post a Comment