Thursday, 31 January 2013

ஓரிடத்தில்

ஓரிடத்தில் 
ஸிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு.
[மலையாளக் கவிதை]
ஓரிடத்தில் 
ஒரு இடமுமில்லாத 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .
காலம் கூட அவர்களிடம் பேசவில்லை 
அதிலோர் ஆள் மேகங்களில் இருந்து வழுக்கி 
பலமுறை வீழ்ந்தான் 
மற்றோர் ஆளோ 
முழுநிலாவில் 
தனித்துப்போனான்.

ஓரிடத்தில் 
ஒருமுடிவுமின்றி 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .
இரவுபகல்கள் கூட 
அவர்களைக் கண்டுகொள்ளாத மாதிரி நடித்தன 
இளங்காற்று மற்றெங்கொ வீசியது 
பனியும் குளிரும் 
எட்டிப்பிடிக்கும் முன்பே 
போய் மறைந்தது 
எனினும் கட்டிமுடியாத 
அந்த பஸ் ஸ்டாப்பில் 
ஒருபோதும் வராத பஸ்ஸை எதிர்பார்த்து 
அதில் ஒருக்காலும் நிகழாத 
இரண்டு காலி இருக்கைகளை எதிர்நோக்கி
ஓரிடத்தில் 
ஒரு இடமுமில்லாத 
இரண்டுபேர் ஸ்நேகித்துக்கொண்டிருந்தனர் .  


ഒരിടത്ത്‌
ഒരിടത്ത്‌ ഒരിടവുമില്ലാതെ
രണ്ടുപേർ സ്നേഹിച്ചിരുന്നു.
സമയം പോലും
അവരോട്‌ മിണ്ടിയില്ല.
അതിലൊരാൾ മേഘങ്ങളിൽ നിന്നു വഴുതി
പലതവണ വീണു
മറ്റേയാളാകട്ടെ,
പൂർണ്ണചന്ദ്രനിൽ
ഒറ്റയ്ക്കായി.

ഒരിടത്ത്‌
ഒരന്തവുമില്ലാതെ
രണ്ടുപേർ സ്നേഹിച്ചിരുന്നു.
രാപകലുകൾ പോലും
അവരെ കണ്ടില്ലെന്നു നടിച്ചു
ഇളംകാറ്റ്‌
മറ്റെങ്ങോ വീശി.
മഞ്ഞും കുളിരും
എത്തിപ്പിടിക്കും മുമ്പേ
പോയി മറഞ്ഞു.
എന്നിട്ടും പണിതീരാത്ത
ആ ബസ്റ്റോപ്പി
ഒരിക്കലും വരാത്ത ബസ്സും കാത്ത്‌
അതിലൊരിക്കലും സംഭവിക്കാത്ത
രണ്ടൊഴിഞ്ഞ സീറ്റും പ്രതീക്ഷിച്ച്‌
അവ
ഒരിടത്ത്‌
ഒരിടവുമില്ലാതെ
സ്നേഹിച്ചു.
Thanks: namukkidayil.blogspot.com

Monday, 28 January 2013




DAHLIA RAVIKOVICH
Translated by Karen Alkalay-Gut



A BABY CAN'T BE KILLED TWICE
On the sewage puddles of Sabra and Shattila
there you transferred masses of human beings
worthy of respect
from the world of the living to the world of the dead.
Night after night.
First they shot
then they hung
and finally slaughtered with knives.
Terrified women rushed up
from over the dust hills:
"There they slaughter us
in Shatilla"
A narrow tail of the new moon hung
above the camps.
Our soldiers illuminated the place with flares
like daylight.
"Back to the camps, March!" the soldier commanded
the screaming women of Sabra and shatilla.
He had orders to follow,
And the children were already laid in the puddles of waste,
their mouths open,
at rest.
Noone will harm them.
A baby can't be killed twice.
And the tail of the moon filled out
until it turned into a loaf of whole gold.
Our dear sweet soldiers,
asked nothing for themselves -
how strong was their hunger
to return home in peace.
காகம் கரைந்தது 
(வரதன்)
காகம் கரைந்தது 
திக்கு வெளுத்தது 
காக்கை அமர்ந்து விருந்தை அழைத்தது 
வானம் வெளுத்தது 

காற்று கனத்தது 
கண் மயங்கியது 
கூடு குளிர்ந்தது 
கடல் தளர்ந்தது 
தூறல் தெறித்தது 
கறுப்பைப் போர்த்திக்கொண்டு 
காத்துமிருந்தது 
കാക്ക കരഞ്ഞു
(വരധന്‍)
കാക്ക കരഞ്ഞു
ദിക്കു വെളുത്തു
കാക്കയിരുന്നു വിരുന്നുവിളിച്ചു
വിരുത്തിവിളിച്ച് വാനം വിളറി

കാറ്റു കനത്തു
കണ്ണു മയങ്ങി
കൂടു തണുത്തു
കുരവ തളര്‍ന്നു
തൂവല്‍ കൊഴിഞ്ഞു
കറുപ്പു പുതച്ച്
കാത്തുമിരുന്നു

വിരുന്നിനു വന്നവ-
രാരെന്നറിയോ?

മരുന്നു തെരഞ്ഞു കരഞ്ഞ കുരുന്നോ
കരിഞ്ഞു കറുത്തു മറഞ്ഞൊരു കുഞ്ഞോ
ഞെരമ്പു മുറിച്ച് മാഞ്ഞൊരു പൂവോ

ഇലയില്‍നിന്ന്
ശിലയില്‍നിന്ന്
ബലിയില്‍നിന്ന്
ചോറുരുളകളുണ്ണാന്‍
കാക്കകളെത്തി

കാണെയൊളിഞ്ഞ്
വട്ടംകൂടി
കുറുകേച്ചാടി
കൂട്ടംകൂടി
കറുപ്പു വിളക്കി
കാക്കപ്പൊന്നുമുരുക്കി
കണ്ണീരടക്കി
പറയടി ചിറകടി
വിരുന്നു കഴിഞ്ഞ്
കരിമ്പന മുകളില്‍
കാക്ക പറന്നു

കാക്ക ചിരിച്ചു
ദിക്കു കറുത്തു
കറുകറെ
കാക്കച്ചിരി മാത്രം ബാക്കി


Friday, 25 January 2013

அன்ஜும் ஹசன்

அன்ஜும் ஹசன்
அன்ஜும் ஹசன் 
அண்டைப்புரம் 
எங்கள் வீட்டுக்கதவிற்குச் செல்லும்
குறுகிய படிக்கட்டுகளின் மீது
பீகாரி பகோடா வாலா ஒருவன்
இரவுகளில் அறிமுகமில்லாத ஒருத்தியை
அடிக்கடி முத்தமிடுவதுஉண்டு

வியப்பூட்டும் செயல்.என் பெற்றோர்அமர்வு அறை
விளக்குகளை அணைத்துவிடுவார்கள்.கார் வெளிச்சம்
உடையாதஓர்  ரகசிய நிழலாக அவர்களைக் காட்டும்.

படிக்கட்டுகள் பிற செயல்களை வரவேற்கும்.உள்ளூர் பக்கீர்
சிலசமயம் அங்கே படுத்திருப்பான், வண்ணம் தீட்டிய சாக்கடை போல
கடந்து செல்வோர்ஆரஞ்சு மரங்களை நன்றாகப்
பார்வையிடப்  படிகளில் ஏறுவதுண்டு

ஆனால் இது வேறு.மென்மையாய்ப் பேசும் பகோடா வாசனையடிக்கிற
பகோடாவாலா வேறு யாருடைய வீட்டுப்படிக்கட்டுகளில்
அடக்கமுடியாத மோகத்தின் அரைமணி நேரத்தீவைத் தேடுவது.

அதுவும் அவனைச் சூழ்ந்து ஒவ்வொரு நாளும் முரட்டுக்கூலிகள்,
தொடை நடுவில் உதை, கேட்டறியாத மொழியில் பேசப்படும்
வழக்கமான வசவுகளுக்கிடையில்




Neighbourhood

On the narrow steps leading
to our gate, the pakoriwallah from Bihar is often found
kissing an anonymous woman at night.

Amazing act. My parents switch off the sitting-room
lights whenever this happens. The car beams show
them up – one unbroken secret silhouette.

The steps invite other actions. The local fakir some-
times lies there, coloured like a ditch, and passers-by
might climb to have a better look at the orange trees.

But this is different. The soft-spoken pakoriwallah
smelling of his pakoris , his half hour island of
defiant passion on the steps of somebody's house,

while around him everyday: the brash freeloaders,
the kick in the groin, the familiar words of abuse
spoken in an unfamiliar language.

Thursday, 24 January 2013

எஸ்ரா பவுண்ட்




கோடா 
எஸ்ரா பவுண்ட் 
ஓ  என் பாடல்களே,
 மக்களின் முகங்களை    நீங்கள் ஏன் அப்படி 
அவ்வளவு ஆவலோடு கூர்ந்து பார்க்கிறீர்கள்?
 இறந்து மறைந்து போன உங்களவர்களை
அவர்களில் கண்டுபிடிப்பீர்களா?

Coda
by Ezra Pound

O my songs,
Why do you look so eagerly and so curiously into people's faces,
Will you find your lost dead among them?

The lamp I lit


The lamp I lit

The flute which I made plays
In someone's house;
The rice which I harvested boils
In someone's oven;
My daughter   who
grew up in my house
laughs in someone's home
Does the lamp I lit
belong only to me?
The poem my ancestors wrote
in the language I spoke,
Scribbled on the tube-trains
of London and Tokyo
Allures the strangers
On ever hour's travel..
Can I claim a copyright
and make a complaint?
[Translated from Tamil by the Author]
Vaiyavan

நான் ஏற்றிய தீபம்  
யார் வீட்டிலோ ஒலிக்கிறது
நான் செய்த புல்லாங்குழல்
யார் உலையிலோ வேகிறது
நான் விளைவித்த செந்நெல்
யார் வீட்டிலோ சிரிக்கிறாள்
என் வீட்டில் வளர்ந்த பெண்
நான் ஏற்றிய தீபம்
எனக்கு மட்டுமா உரிமை ?
நான் பேசும் மொழியில்
என் முன்னோர் எழுதிய கவிதை
லண்டன் ரயிலும்
ஜப்பான் ரயிலிலும்
மணிக்கொரு பயணம் போய்
மாற்றாரை மயக்கினால்
வழக்கா போடமுடியும்
காப்பிரைட் கேட்டு ?
வையவன் 

?



?
Written in Tamil by: Pudumaippithan

Two were going, a master and a disciple, on the way where no human feet had trodden until then.. There was no difference found between them except their behaving.. They were equal aged. Same grey hair, same wrinkles. If observed closer only, one would seem figuratively younger.. But old age became evident when a thought passed over his face.
They were passing over the snow desert of the Himalayan regions. The chillness seemed to saw off one's life. Mount Kailash stood in the distance like an unconquerable ideal. Their feet went buried in the recently fallen snow slush . They got slipped at times over some snow rocks found in some places.
The master came to a turning point where the vicinity got a legible angle.
"See, it is Mount Kailash, looking high, erect and proud like tearing off the sky! There… on top of the peak, do you see the star illumining bright? The ideal, the God it is like that only." The master pointed it out. Passion poured out from his eyes like the one who touched the shores of Truth.
"Lord, what is the use of standing erect? It is lifeless. Is it enough being illuminant? What is the use of being there or go invisible just to remain for the sake of getting touched by someone?" The disciple said.
"If one touches it, it equals the whole world has touched."
"Since the world loses him?"
" No. Since he loses the world."
They were looking over the peak with their heads straight immersed in contemplation,.
After an instant the master said, hanging down his head
" No, what I said was wrong"..
Translated from Tamil by: Vaiyavan

Tuesday, 22 January 2013

பழைய நாட்களின் சட்டை



वैसी ही कमीज

[मोहन राणा]

 दोपहर और शाम के बीच
आता है एक अंतराल
जब थक चुकी होती हैं
आवाजें क्रियाएँ
जैसे अब
समाप्त हो गई सभी इच्छाएँ,
बैठ जाता हूँ किसी भी
खाली कुर्सी पर
पीली कमीज पहने
एक लड़का अभी गुजरा
मुझे याद आई
अपनी कमीज
उन साधारण से दिनों में
यह संभव था
हाँ यह जीवन संभव था
मैं पहने हूँ अब भी
वैसी ही कमीज

A Standard Shirt

Between midday and nightfall
there comes a time
when the day's noise and actions
are already done with, just as now,
all desires quenched,
I am ready to sit down
on any chair.
A boy in a yellow shirt
has just passed by
and made me think
of a shirt of mine
in those old ordinary days.
So it was possible.
Yes, this life was possible.
And here I am, still wearing
a shirt just like that.


பழைய நாட்களின் சட்டை

பிற்பகலுக்கும் இரவு உதிக்கும் முன்னும்
ஒரு நேரம் வருகிறது,
பகலின் சந்தடியும் செயல்களும்
கிட்டத்தட்ட முடிந்து போன
இதே போன்ற ஒரு வேளையில்
இச்சைகள் எல்லாம் தணிந்துபோய்
நான் எந்தக் காலியான நாற்காலியிலும்
அமரத் தயாராய் இருக்கிறேன்


மஞ்சள் சட்டையில் ஒரு பையன்
என்னை இதோ இப்போது கடந்து போய்
என்னை நினைத்துப் பார்க்க வைத்தான்
அந்தப்பழைய நாட்களில் நான்
அணிந்திருந்த என் சட்டை ஒன்றைப்பற்றி
ஆக எல்லாம் சாத்தியமானது தான்
ஆம், இந்த வாழ்க்கை சாத்தியமாயிருந்தது,
இதோ நான், மீண்டும் அதே போன்ற
ஒரு சட்டை அணிந்திருக்கிறேன்
மோகன் ராணா
[பிரபல இந்திக் கவிஞர்]

வயலின் மாஸ்டர்

வயலின் மாஸ்டர்
எட்வின்.ஜே.எப்.டிசௌசா
(கொங்கணிச் சிறுகதை)

 மாதா கோயில் மணிகள் ஒலிக்கத்தொடங்கியதால் தான் அந்த சூழ்நிலையின்  அமைதி குலைந்தது. காற்று அந்தக்குறிப்பை உள்வாங்கிக்கொண்டது போல இனிய கிசுகிசுப்புக்களோடு வீசத் தொடங்கியது. மணிக்கூண்டிலிருந்து ஆரம்ப அலைகள் மிதக்கத் தொடங்கியதுமே அவரால் அந்தத் தெய்வீகப் பிரார்த்தனையைக் கேட்க முடிந்தது.
அமைதியான இரவு.... புனிதமான இரவு.... அது அந்த நகரத்தின் மிகப் புராதனமான மிகவும் அழகிய சர்ச். கூட்டிசைக்குப் பெயர் பெற்ற சர்ச்.அதுவும் அந்த வயலின் இசை..ஓ.அவ்வளவு இதமூட்டும் இசை அது. பழக்கப்பட்டஓர் உணர்வினால் அவரது விரல்கள் விறுவிறுத்தன. முதிர்ந்து சுருங்கித் துவண்டு போயிருந்த அவரது நரம்புகளில் வெதுவெதுப்பு பாய்ந்து பரவத் தொடங்கியது. அவரது உலகம் உயிர்த்து எழுந்தது.அவரது சங்கீத உலகம்
   வயலின் மாஸ்டர்.
  அவரை அறிந்தவர்கள்... அந்தப் பெயரில் தான் அவர்களை அறிந்திருந்தனர். அந்தப் பெயர் அவருக்குக் கையுறை போல் அப்படிப் பொருந்தியது.  அந்தப் பட்டப் பெயரால் அறியப் படுவதற்கு அவரது புகழ் ஒன்றும் காரணமில்லை.அவர் புகழ் பெற்றவரே அல்ல. அவர் தன் வயலின் நாண்களை,  வாழ்வின் நாண்களை அறிந்த,  ஒரு சாதாரணமான வயலின் மாஸ்டர். அது தான் அவருக்குக் கிடைத்த அங்கீகாரம், அடையாளம், வெளிப்பாடு.
     அன்பு.
      அவர் விரல்களைத் தன் மோவாயின் மீது ஓடவிட்டார். அது மிருதுவாக இருந்தது. அவர் அப்போது தான் ஷேவ் செய்து அந்த மாலைப் பொழுதில் ஒரு ஹாட் டவல் ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தார். ஆப்டர்-ஷேவ் லோஷன் இன்னும் மணத்தது.
      அவர் தனக்குத் தானே ஒரு புன்னகை செய்து கொண்டார்.
அவர் அணிந்திருந்த சூட் பழையது தான்.ஆனால் சுத்தமாகவும் சுருக்கங்கள் இன்றியும் காணப்பட்டது. லாண்டரிக்காரர் மிக நன்றாக  அதில் தன் வருடாந்திரக் கைத்திறனைக்காட்டியிருந்தார். 
அவர் கைவிரல்களைத் தன் தலை முடி மீது தடவினார். அது இளைத்து நரைத்துப் போயிருந்தது.
வயது.அச்சுறுத்தும் எதிரி.
இன்னும் எத்தனை வருடங்கள்? ஐந்து?ஆறு?
அதற்குப் பின்?
இதைப் போன்ற ஓர் அருமையான குளிர்ந்த கிறிஸ்துமஸ் இரவில் அவர் அங்கே இருக்கப்போவதில்லை.உலகில் ஒரு வயலின் மாஸ்டர் குறைந்து போவார். அதைக் குறித்து அவர் அஞ்சவில்லை.அவர் ஒரு முழுமையான நிறை வாழ்வு வாழ்ந்திருந்தார்.
அவர் ஒரு சின்ன கடை வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றும் அங்கே இருந்தது. ஆனால் வேறு நோக்கத்துடன். அடிக்கடி அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டிருந்தனர்.
ஓ... இந்தக் கிழவர் கூடவா? அவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க வேண்டும்...
ஆனால் அந்தக் கிழவர் ஒரு தெய்வீக எண்ணத்தோடு அங்கே இருந்தார்.வருடா வருடம் ஒவ்வொரு  கிறிஸ்துமஸ் இரவிலும் அவர் அங்கே வந்து உட்காருவார். சர்ச்சில் சர்வீஸ் தொடங்கும் வரை. தன் கழிந்த காலத்தை நினைவு கூர்ந்தபடி.கழிந்து போன அந்தக் காலம் அவர் எதிரில் அவரது நிறைவாழ்வின் மௌன நிரூபணம் போல அணிவகுத்துச் செல்லும்.
இதோ பத்து நிமிஷத்துக்கு முன் கிளிப்பியும் க்வீனியும் சர்ச்சுக்குப் போகும் வழியில் அவரைக் கடந்து போனார்கள்.க்வீனி அவரிடம் வயலின் கற்றுக் கொண்டவள். அவள் எளிமையானவள். அழகி.
ஐந்து வருஷங்களுக்கு முன் அவளது ஒரே சகோதரன் இறந்து போனான்.அவளது கண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும் மனமுடைந்து போய் ஆறுதல் தேடி அவள் அவரிடம் வந்தாள். அவரது ஆறுதல் வார்த்தைகளும் சங்கீதமும் ஒன்றிணைந்து எந்த நொந்தமனசுக்கும் இதமான மருந்தாகி மனப்புண்ணை மாற்றி மகிழ்ச்சியளித்தன.அப்புறம் இப்போது அவள் கிளிப்பியைத் திருமணம் செய்து கொண்டாள்.அவருக்குக் கிளிப்பியைத் தெரியாது. இருந்தாலும் திருமணம் முடிந்ததுமே அவர்கள் இருவரும் அவரை வந்து பார்த்தார்கள். அவரால் பொங்கி எழுந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்புறம் இந்த சிறிய தேவதை மரியா.அவள் தன் தாயின் கைரயப் பிடித்துக் கொண்டு நடந்து போனாள்.அவனது தந்தை ஓரடி அவர்கள் பின்னால் வந்தார். அந்தப் பணக்காரத் தம்பதிகளின் ஒரே குழந்தை. அவரது மாணவி. மரியா குநும்புக்காரி.பிடிலாதமானவள்.வயலின் பாடம் முடிந்ததுமே மரியாவின் அம்மா வயலின் மாஸ்டருக்கு ஒரு சாப்ட் டிரிங்க் கொடுப்பது வழக்கம்.மரியாவுக்கு அது முதலிலேயே கிடைத்துவிடும்.அது அவளுக்குப் பிடிக்காது
வயலின் பாடம் தொடங்கும் முன்பே மாஸ்டருக்கு சாப்ட் டிரிங்க் தர வேண்டுமென்று வலியுறுத்துவாள்.சாதித்து விடுவாள். அவரைப் பொறுத்தவரை அது ஒன்றும் பெரிதில்லை.ஆனால் அவர் அவளது விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள மாட்டார். அந்த வீட்டில் பெருந்தன்மை பூத்து மலர்வதை அவரால் காண முடிந்தது. அதை முளையிலேயே கிள்ளி எறிய அவர் விரும்பவில்லை.அவளது வயதில் அவர் ஒரு சாப்ட் டிரிங்க் என்னமாய் ருசிக்கும் என்று அவருக்குத் தெரியாது.ரெஸ்டாரெண்ட்களிலும் பணக்காரர் வீட்டு மேஜைகளிலும் அந்த வர்ணமான பானத்தைப் பார்த்திருக்கிறார். அந்த நாட்கள் கடந்து போய்விட்டன. அதைப்பற்றி அவருக்கு வருத்தமில்லை.
இதோ சந்தியாவும் அருணும் அவரைக் கடந்து சர்ச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு அவர்களுக்கே உரிய ஆனந்த உலகில் நடந்து சென்றார்கள்.சந்தியா அழகின் மேன்மைக்கு எடுத்துக்காட்டு.அவர்கள் இருவருமே அவரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள். அவர்கள் காதலைக்குறித்து அவர் தான் முதன்முதலில் அறிந்தவர்.அவர்களின் காதல் கடிதங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கைமாற அவர் ஒரு கருவி.அவர்களது திருமணம் நிச்சயமானபோது அவரது கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தது.
இதோ பச்சை நிற ஆடையில் ஓர் இளம்பெண்.
அவளைப் பார்த்ததும் அவரது இதயத்தை ஒரு வேதனையூட்டும் வலி முறுக்கியது. அவருக்கும் ஒரு மகள் இருந்தாள். சாரா.அவளுக்கு உடைகள் பிடிக்கும்.இரண்டு வருஷங்களுக்கு முன் வந்து தனக்கு ஒரு பச்சை உடை வேண்டும் என்று கேட்டாள்.அவரிடம் பணம் இல்லை. சாராவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.ஆனால் அவள் ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.அவர் அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் வெட்டவெளியில் விரிந்த ஆகாயத்தின் கீழே நின்றனர்.
“சாரா, அந்த நட்சத்திரங்களைப் பார்” என்று அவர் வானத்தைச் சுட்டிக் காட்டினார். “அவைகளுக்கு வெவ்வேறு வண்ணங்கள் உண்டு,வெவ்வேறுவகை பிரகாசங்கள்.ஆனால் அந்த பண்புகள் எல்லாம் கடவுள் கொடுத்தது.அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல.நமக்கேஉரி வண்ணங்களும் பிரகாசங்களும் நம்மிடமும் உண்டு. அது தான் பிறரை நேசிக்கவும் பிறரால் நேசிக்கப்படவும் உள்ள பண்பு.இந்த வண்ணம் மாற நாம்விடக் கூடாது”
சாரா அழுகையை நிறுத்தினாள்.வயலின் மாஸ்டரைக் கட்டித் தழுவிக்கொண்டாள்.
 சாராவுக்குப் போன வருடம் திருமணம் நடந்தது.  அவளும் அவள் கணவனும் கிறிஸ்துமஸுக்கு வந்திருந்தார்கள். வீட்டிற்குள் படியேறும்போதே  அவள் கணவன் அவளிடம் “குறைந்த பட்சம் இந்த முறையாவது உனக்கு ஒரு பச்சைக் கலர் புடவை வாங்கித் தர விரும்புகிறேன் உனக்குப் பச்சைக் கலர் தான் பிடிக்கும் என்று உன்னுடைய அப்பா என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறார்…”என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
 சாரா இனிமையாகப் புன்னகை செய்திருக்க வேண்டும். “அன்பே .. நீங்கள் என்னைப்புரிந்து கொள்கிறீர்கள்.. என்னை நேசிக்கிறீர்கள் ... எனக்கு வேண்டியதெல்லாம் இது தான் …” என்று கட்டாயம் சொல்லி இருப்பாள்.வயலின் மாஸ்டர்  தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டார்.
இதோ அந்தத் துரதிருஷ்டசாலி ஜெப்ரி. அவரது நண்பன். அவரை நோக்கி அவன் நடந்து வந்துகொண்டிருந்தான். ஒரு காலத்தில் செல்வச் சீமான். ஜெப்ரி எல்லாவற்றையும் எவ்வாறோ இழந்து விட்டான். மனைவி,  பணம், குழந்தைகள். அந்தச் சூழ்நிலையில் தற்செயலாகத் தான்  ஜெப்ரி வயலின் மாஸ்டரைச் சந்தித்தான்.அவர் அவனுக்கு வார்த்தைகளால் மட்டும் அல்ல தன் வயலின் இசையாலும் ஆறுதல் ஊட்டினார். ஜெப்ரியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வயலினில் எது நடக்க வேண்டுமோ அது றடந்தே தீரும் எள்ற பாடலை வாசித்துக் காட்டினார்.
அன்றிலிருந்து ஜெப்ரி அவர் வீட்டிற்கு வாலாயமாக வர ஆரம்பித்தான்.அவரும் அதே பாடலை அவனுக்காகஅதே ராகத்தில் ஒவ்வொரு நாளும் இசைத்தார்
“எனன போகலாமா?” என்று அவர் எதிரில் வந்து நின்ற ஜெப்ரி கேட்டான்.ஆழ்ந்த பெருமூச்செறிந்துவிட்டு வயலின் மாஸ்டர் எழுநதார். இருவரும் ஒள்றாக சர்ச்சுக்குள் நுழைந்தனர்.
“அமைதியான இரவு.... புனிதமான இரவு…”
 கிநிஸ்துமஸ் தினத்தில் ஏன் இந்தப் பாடல் மட்டும் உலகெங்கிலும் இடம் பெறுகிறது?
 வயலின் மாஸ்டர் தனக்குள் கேட்டுக்கொண்டார்.ஒவ்வோர் இரவும் புனிதமானது அல்லவா?  ஏன் ஒரு இரவு மட்டும்.. ஒவ்வோர் விநாடியும் ஒவ்வோர் நிமிடமும் ஒவ்வோர் நாளும் ...எல்லாம் புனிதமானவை அல்லவா? உலகம் என்ன ஒட்டுமொத்தப் பேரழிவின் விளிம்பிலா இருக்கிறது?நாம் ஏன் கிறிஸ்துமஸ் அன்று மட்டும் நல்லெண்ணம் உடையோருக்கு  சமாதானம் கிட்டுக என்று கூறுகிறோம்?
கிறிஸ்துவின் சமாதானம் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இந்த உலகை ஆண்டு வரவில்லையா?
அவரது கேள்விகளுக்கான பதில்கள் அவருக்குத் தெரியும்.உலகம்  ஒட்டுமொத்தமாகக் கெட்டது ஆகிவிடவில்லை. அதில் உள்ள நல்லது ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது.ஒவ்வோர் ஆண்டும் நல்லதிற்கு ஒன்றிணைவதற்கான ஓர் அழைப்பு மணியோசை தேவைப்படுகிறது. அந்த நாட்கள் வரும்...வயலின் மாஸ்டர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.அந்த நாட்கள் வரும்...
இது அவரது சமாதானத்தின் இரவு. போற்றுதலுக்குரிய நிசப்தத்தின் இரவு
அவர் நம்பினார். மகிழ்ச்சியடைந்தார்.
அதுவே அவரது கிறிஸ்துமஸ்.