Sunday, 27 July 2014

ஹிரேன் பட்டாச்சார்யா:அக்டோபர் நிலவெளி

ஹிரேன் பட்டாச்சார்யா

1932ல் பிறந்த ஹிரேன் பட்டாச்சார்யா சமகால அஸ்ஸாமி கவிஞர்களில் ஒருவர். 1957ல் அவரது முதல் கவிதை பிரசுரம் கண்டது. அவரது முதல் கவிதைத்தொகுதியான மோர் தேஷ் மோர் ப்ரேமோர் கபிதா1972ல் வெளிவந்தது. 1974ல் பிபின்ன தினர் கபிதா 1976ல் கபிதார் ரோடு மற்றும் தோமார் கான் தொகுதிகளும் வெளிவந்தது. இது தான் அவரது கவிதைகளின் தொடர் ஓட்டம் மிகுந்த காலம் 1991ல் சைசார் பதர் மனுஹ் [முழுத்தொகுதி] வெளிவந்தது.ஆங்கிலத்தில் ஏன்சியன்ட் காங் என்ற கவிதைத்தொகுதியும், வங்காளியில் ஜோனாகி மோன் ஒ அனுஷங்கா என்ற தொகுதியும் வெளிவந்துள்ளன,

பிஷ்ணு பாபா விருது, [1985] சோவியத் நாடு -நேரு விருது [1987 ] சாஹித்ய அகாடெமி விருது [1992] மற்றும் 2000ல் அஸ்ஸாம் வேல்லி இலக்கிய விருதும் பெற்றிருக்கிறார் 

 அவரது அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் அஸ்ஸாமிய வடிவம் 
                                                                 

October Landscape

Translated by Uddipana Goswami

I
The frenzy of a brutal sky
Has ended.
Green waves ripple
Through the restive fields.
II
White flowers of the sugarcane
Pierce the inky sky
As autumn whispers —
Every poem has its season.
III
With every shaft of light —
Amazement.
With passion —
Words awaken.

அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு [வையவன்]
1
குரூர  ஆகாயத்தின்
சீற்றம் தணிந்தது
சாந்தமான வயல்களில்
பச்சை அலைகள் குமிழ் விடுகின்றன
2
இலையுதிர் காலம் கிசுகிசுக்கும்போது
கரும்புப் பயிரின் வெள்ளைப் பூக்கள்
நீல வானைத் துளைக்கின்றன White flowers of the sugarcane
ஒவ்வொரு கவிதைக்கும்
அதனதன் பருவங்களுண்டு
3
ஒவ்வொரு ஒளிவீச்சிலும்
ஆச்சரியம் பெற்று
உணர்ச்சிவேகத்தொடு
சொற்கள் விழித்தெழுகின்றன



No comments:

Post a Comment