Sunday, 27 July 2014

ஹிரேன் பட்டாச்சார்யா:அக்டோபர் நிலவெளி

ஹிரேன் பட்டாச்சார்யா

1932ல் பிறந்த ஹிரேன் பட்டாச்சார்யா சமகால அஸ்ஸாமி கவிஞர்களில் ஒருவர். 1957ல் அவரது முதல் கவிதை பிரசுரம் கண்டது. அவரது முதல் கவிதைத்தொகுதியான மோர் தேஷ் மோர் ப்ரேமோர் கபிதா1972ல் வெளிவந்தது. 1974ல் பிபின்ன தினர் கபிதா 1976ல் கபிதார் ரோடு மற்றும் தோமார் கான் தொகுதிகளும் வெளிவந்தது. இது தான் அவரது கவிதைகளின் தொடர் ஓட்டம் மிகுந்த காலம் 1991ல் சைசார் பதர் மனுஹ் [முழுத்தொகுதி] வெளிவந்தது.ஆங்கிலத்தில் ஏன்சியன்ட் காங் என்ற கவிதைத்தொகுதியும், வங்காளியில் ஜோனாகி மோன் ஒ அனுஷங்கா என்ற தொகுதியும் வெளிவந்துள்ளன,

பிஷ்ணு பாபா விருது, [1985] சோவியத் நாடு -நேரு விருது [1987 ] சாஹித்ய அகாடெமி விருது [1992] மற்றும் 2000ல் அஸ்ஸாம் வேல்லி இலக்கிய விருதும் பெற்றிருக்கிறார் 

 அவரது அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் அஸ்ஸாமிய வடிவம் 
                                                                 

October Landscape

Translated by Uddipana Goswami

I
The frenzy of a brutal sky
Has ended.
Green waves ripple
Through the restive fields.
II
White flowers of the sugarcane
Pierce the inky sky
As autumn whispers —
Every poem has its season.
III
With every shaft of light —
Amazement.
With passion —
Words awaken.

அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு [வையவன்]
1
குரூர  ஆகாயத்தின்
சீற்றம் தணிந்தது
சாந்தமான வயல்களில்
பச்சை அலைகள் குமிழ் விடுகின்றன
2
இலையுதிர் காலம் கிசுகிசுக்கும்போது
கரும்புப் பயிரின் வெள்ளைப் பூக்கள்
நீல வானைத் துளைக்கின்றன White flowers of the sugarcane
ஒவ்வொரு கவிதைக்கும்
அதனதன் பருவங்களுண்டு
3
ஒவ்வொரு ஒளிவீச்சிலும்
ஆச்சரியம் பெற்று
உணர்ச்சிவேகத்தொடு
சொற்கள் விழித்தெழுகின்றன



Saturday, 7 June 2014

வசன இலக்கியம்.-1

பசவண்ணா 

1.  இதோ பார், உலகம் அலையாக விம்மி எழுந்து என் முகத்தின் மீது வீசுகிறது.
    ஏன் அது என் இதயம் வரை எழவேண்டும், சொல்.
    ஏன் அது என் தொண்டை வரை உயர்ந்து வரவேண்டும் சொல் 
    பிரபோ ,  ஒன்று என் தலைக்கு மேலே உயரும்போது எப்படி எதையும்                   உன்னிடம் சொல்வேன் ?
    பிரபோ , பிரபோ , என் கூக்குரல்களைக் கவனி!

    ஓ , கூடல சங்கம தேவா!

 2. நான் ஒவ்வொரு நாளும் சந்திரனைப்போல் ஒவ்வொரு 
     இலக்கமாக ஒளியைக் கூட்டி வந்தேன்.
     இந்த மலைப்பாம்பு உலகம், எல்லாம் விழுங்கும் ராகு, 
     என்னை விழுங்கிவிட்டது 
     இன்று என் சக்தி கிரஹணம் ஆகி மறைந்துவிட்டது 
    விடுதலை  எப்போது?ஓ , கூடல சங்கம தேவா!
   
 3. பிதாவே! என் அறியாமையால் நீ என்னை எதிர்பாராத    உலகங்களில்  அன்னையின் கருவறைக்குள் 
  கொண்டுவந்தாய்.
   பிறப்பது என்பதே   ஓ , பிரபோ, ஒரு பிழையா?
   முன்பு ஒருதரம் பிறந்துவிட்டதற்காக என் மீது இரக்கம் காட்டு.
    நான் வாக்களிக்கிறேன், கூடலசங்கமா தேவா,
    மீண்டும் நான் பிறக்க மாட்டேன் 
   


Saturday, 8 February 2014

குஜராத்தி கவிஞர் உமாஷங்கர் ஜோஷி காலமானபோது :பிரபோத் பாரிக்

பிரபோத் பாரிக்


Prabodh Parikh is a Gujarati poet, short fiction writer and visual artist. He retired recently as Head of the Department of Philosophy at Mithibai College, Mumbai. His book of poems, Kaunsman (Between Parentheses/In Brackets), published in 1993, is a significant collection in Gujarati literature, representing thirty years of work in poetry. It won him several awards, including the Best Poetry Collection of 1993-94 (Gujarat Sahitya Akademi) and the G.F. Saraf Award for Best Gujarati Book in 1992-95.




















பிரபல குஜராத்தி கவிஞர் உமாஷங்கர் ஜோஷி காலமானபோது எழுதியது 

நீங்கள் எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கினீர்கள்
நீங்களே அவற்றை ஈரமாக்கினீர்கள்
உங்கள் கொடையால் பூமியைப் பெருக்கெடுத்து ஓடச்செயதீர்கள்
கானகத்தின் ஊடே எங்களுக்கு நடக்கக் கற்பித்தீர்கள் ,
கானகத்தைக் கடக்கக் கற்பித்தீர்கள்
நீங்கள் தான்  உள்ளுக்குள்ளே மூடியிருக்கும் ஒளியின் கதவுகளைத் தட்டுகின்ற   மந்திரங்களை எங்கள் செவியில் கிசுகிசுத்தீர்கள்
இங்கே இருந்து அங்கே செல்கிற பாலத்தை
நீங்களே உருவாக்கினீர்கள்
நீங்களே எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கியவர்
நீங்களே அவற்றை ஈரப்பதமாக்கியவர்
பிரபோத் பாரிக்