போஸ்ட்மார்டம்
ஆங்கில மூலம் அமிதவ குமார்
மொழிபெயர்ப்பு: வையவன்
நர்ஸ் ஐந்து மணிக்கு வேலையை விட்டு வெளியேறினாள். செத்துப்போன பெண்மணியின் கணவன் வாசலருகே டாக்டர் அஹ்மத் நீங்கள் காத்திருக்கும்போது என்று எழுதி மாட்டியிருந்த போர்டின் கீழ முழங்கை மூட்டுக்களை இரண்டு உள்ளங்கைகளும் மூடியிருக்க உட்கார்ந்திருந்தான். அவள் வெளியேறியதை அவன் பார்க்கவில்லை.
மதிய உணவுக்குச் சற்று முன் ஆர்மி கேம்பிலிருந்து ஒரு வாகனம் வந்தது. ஒரு கறுத்த சோல்ஜர் இடது கையில் ஒரு சிறிய ரைபிளோடு வந்து கதவைத் தள்ளித் திறந்தான்.
சிப்பாய் வந்தான் . .
கர்னல் வருகிறார் என்று அறிவித்தான். டாக்டர் அஹ்மத் தானாக எழுந்து நின்றுகொண்டார்.
வந்த கர்னல் பருத்திருந்தார். அவர் அமைதியாகக் காணப்பட்டார். அளவுக்கு மீறிய சுத்தத்தோடு , சேற்றிலே தங்கப் பச்சை நிறத்தில் மின்னும் தவளை போல . தன லத்தியை மேஜை மீது வைத்துவிட்டு
நர்ஸை அலுவலகத்தை விட்டு வெளியேறக் கட்டளை இட்டார்.
டாக்டர் அஹ்மத் மணி அடித்ததும் மீண்டும் உள்ளே போனாள். உச்சித் தளத்தில் அவர்கள் வீட்டிலிருந்த அவர் மனைவி ஜாக்கியாவை அழைத்து வரச் சொன்னார். வழக்கமாக அவர் அவளை போனில் தான் கூப்பிடுவார். கர்னலின் கட்டளையை ஏந்தி நர்ஸ் அவசரமாக அகன்றாள்.
ஜாக்கியா குழந்தை மருத்துவர். பெண்களிடம் தாய்ப்பால் கொடுக்குமாறு அறிவுரை சொல்வதில் தேர்ந்தவள் , ஆனால் தன்னை ஏன் போஸ்ட்மார்டம் செய்யச் சொல்கிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டாள்.
சோல்ஜர்கள் ஆபேரஷன் அறையில் ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியேறினர் டாக்டர் வெள்ளைத் துணியை அகற்றியதும் அவள் ஒரு சத்தம் போட்டுவிட்டு உரத்த குரலில் பாதியா ஓதத் தொடங்கினாள். பிரேத பரிசோதனையைத் தொடர்வது அவளுக்குக் கடினமாக இருந்தது. அவளுக்கு வளர்ந்த மகள் ஒருத்தி இருந்தாள்
பிறகு நர்ஸ் சவமாயிருந்த பெண்ணோடு தனியாக நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தாள் .ரத்தத்தையும் மற்ற கழிவுகளையும் சுத்தம் செய்து அவளுக்குத் தையல் போட்டாள்.வயிறும் தொடைகளும் பச்சை நிறமாகிவிட்டிருந்தன. அது எதிர்பார்த்தது தான். நாக்கிலும் உதட்டிலும் குறிப்பிடத்தக்க மாதிரி ஒரு வீக்கம் தெரிந்தது . ஈமச்சடங்கு முடியும் வரை உடல் தாங்குமா என்று சந்தேகப் பட்டாள். கல்லறைக்கு இந்த வெய்யிலில் ஊர்வலம் சென்றடைய ஒரு நாள் ஆகும்.
ஒரு வருஷத்துக்கு முன்னால் வடக்கே இருந்து வந்த டாக்டர் ஒருவர் தம்மிடம் கொண்டுவரப்பட்ட சவம் பலரால் கற்பழிக்கப் பட்டதாக
க்கண்டுபிடித்தார் .அது ஒரு தவறு, அந்தப் பெண்மணி வாடிக்கையாளர்களுக்காக பட்டாளத்துக்கு வருவது வழக்கம் என்றும் அதை அவள் கணவன் கண்டுபிடித்து அவளைக் கொன்றுவிட்டதாகவும் ஒரு கதை சொன்னார்கள்
அடைசல் மிக்க, வெதுவெதுப்பான அந்த அறையில் தன பற்கள் கடகடப்பதை நர்ஸ் உணர்ந்தாள்.
அதை அடக்கிக் கொண்டு அவள் தன க்ளௌஸ் அணிந்த கையை நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் .பிறகு அவற்றை பிரார்த்தனை செய்வது போல் திருப்பி தன விரல்களின் மேல் படிந்திருந்த கறுத்த பிசுபிசுப்பான பொருளின் மீது படிந்திருந்த படிமத்தைப்பார்த்தாள்.
எந்தப் பிழையும் நிகழவில்லை ; எனினும் அது கடினமான வேலை.டாக்டர் ஜாக்கியா குடும்பத்தாரிடம் அந்த உடல் மூன்று முறை கழுவப்பட்டதாக அநேகமாக சொல்லக்கூடும் .அந்தப் பெண்கள் எது ஒழுங்குமுறையோ அதைச் செய்யச்சொல்லி வற்புறுத்தப் போவதில்லை. அவர்களை எப்படி அவளால் காப்பாற்ற முடியும்? நர்ஸிங் ஸ்கூலில் மேனி மீதுள்ள சிகரெட் சூடுகளை மறைக்கவோ அருந்த முலைக்காம்புகளை த்தைக்கவோ யாரும் கற்றுத்தருவதில்லை.
அவள் முடிவாக அறையை விட்டு வெளியே வரும்போது ஹால் வழியில் ஒரு டஜன் சோல்ஜர்கள் நிற்பதைக்கண்டு அவள் திடுக்கிட்டாள் .மிக அருகே நின்றிருந்த ஒருவன் கண்ணைச் சந்தித்து இலேசாக கண்ணடித்தாள். ஆனால் அவன் அமைதியாக ஒரு அணிலைக் கொண்டு வந்து போட்ட நாய் மாதிரி கூச்சப் பட்டுக்கொண்டு நின்றான்.
ஆறு மணிக்கு தன சிறிய அறையில் டிவிக்கு முன் அவள் உட்கார்ந்திருந்தால். அங்கே அவள் இளம்பெண்ணாக திருமணப் போட்டோ ஒன்றில் நின்றிருந்தாள். செய்தி வாசிப்பவர் 26 மணி நேரமாகக் காணாமல் போயிருந்த இளம்பெண் ஒருத்தி சாக்கடையில் கண்டெடுக்கப் பட்டதாகக்கூறினார். இரவு நேரத்தில் அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று மோதியதாக செய்தி வாசிக்கப்பட்டது
.