Sunday 27 July 2014

ஹிரேன் பட்டாச்சார்யா:அக்டோபர் நிலவெளி

ஹிரேன் பட்டாச்சார்யா

1932ல் பிறந்த ஹிரேன் பட்டாச்சார்யா சமகால அஸ்ஸாமி கவிஞர்களில் ஒருவர். 1957ல் அவரது முதல் கவிதை பிரசுரம் கண்டது. அவரது முதல் கவிதைத்தொகுதியான மோர் தேஷ் மோர் ப்ரேமோர் கபிதா1972ல் வெளிவந்தது. 1974ல் பிபின்ன தினர் கபிதா 1976ல் கபிதார் ரோடு மற்றும் தோமார் கான் தொகுதிகளும் வெளிவந்தது. இது தான் அவரது கவிதைகளின் தொடர் ஓட்டம் மிகுந்த காலம் 1991ல் சைசார் பதர் மனுஹ் [முழுத்தொகுதி] வெளிவந்தது.ஆங்கிலத்தில் ஏன்சியன்ட் காங் என்ற கவிதைத்தொகுதியும், வங்காளியில் ஜோனாகி மோன் ஒ அனுஷங்கா என்ற தொகுதியும் வெளிவந்துள்ளன,

பிஷ்ணு பாபா விருது, [1985] சோவியத் நாடு -நேரு விருது [1987 ] சாஹித்ய அகாடெமி விருது [1992] மற்றும் 2000ல் அஸ்ஸாம் வேல்லி இலக்கிய விருதும் பெற்றிருக்கிறார் 

 அவரது அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் அஸ்ஸாமிய வடிவம் 
                                                                 

October Landscape

Translated by Uddipana Goswami

I
The frenzy of a brutal sky
Has ended.
Green waves ripple
Through the restive fields.
II
White flowers of the sugarcane
Pierce the inky sky
As autumn whispers —
Every poem has its season.
III
With every shaft of light —
Amazement.
With passion —
Words awaken.

அக்டோபர் நிலவெளி  என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு [வையவன்]
1
குரூர  ஆகாயத்தின்
சீற்றம் தணிந்தது
சாந்தமான வயல்களில்
பச்சை அலைகள் குமிழ் விடுகின்றன
2
இலையுதிர் காலம் கிசுகிசுக்கும்போது
கரும்புப் பயிரின் வெள்ளைப் பூக்கள்
நீல வானைத் துளைக்கின்றன White flowers of the sugarcane
ஒவ்வொரு கவிதைக்கும்
அதனதன் பருவங்களுண்டு
3
ஒவ்வொரு ஒளிவீச்சிலும்
ஆச்சரியம் பெற்று
உணர்ச்சிவேகத்தொடு
சொற்கள் விழித்தெழுகின்றன



Saturday 7 June 2014

வசன இலக்கியம்.-1

பசவண்ணா 

1.  இதோ பார், உலகம் அலையாக விம்மி எழுந்து என் முகத்தின் மீது வீசுகிறது.
    ஏன் அது என் இதயம் வரை எழவேண்டும், சொல்.
    ஏன் அது என் தொண்டை வரை உயர்ந்து வரவேண்டும் சொல் 
    பிரபோ ,  ஒன்று என் தலைக்கு மேலே உயரும்போது எப்படி எதையும்                   உன்னிடம் சொல்வேன் ?
    பிரபோ , பிரபோ , என் கூக்குரல்களைக் கவனி!

    ஓ , கூடல சங்கம தேவா!

 2. நான் ஒவ்வொரு நாளும் சந்திரனைப்போல் ஒவ்வொரு 
     இலக்கமாக ஒளியைக் கூட்டி வந்தேன்.
     இந்த மலைப்பாம்பு உலகம், எல்லாம் விழுங்கும் ராகு, 
     என்னை விழுங்கிவிட்டது 
     இன்று என் சக்தி கிரஹணம் ஆகி மறைந்துவிட்டது 
    விடுதலை  எப்போது?ஓ , கூடல சங்கம தேவா!
   
 3. பிதாவே! என் அறியாமையால் நீ என்னை எதிர்பாராத    உலகங்களில்  அன்னையின் கருவறைக்குள் 
  கொண்டுவந்தாய்.
   பிறப்பது என்பதே   ஓ , பிரபோ, ஒரு பிழையா?
   முன்பு ஒருதரம் பிறந்துவிட்டதற்காக என் மீது இரக்கம் காட்டு.
    நான் வாக்களிக்கிறேன், கூடலசங்கமா தேவா,
    மீண்டும் நான் பிறக்க மாட்டேன் 
   


Saturday 8 February 2014

குஜராத்தி கவிஞர் உமாஷங்கர் ஜோஷி காலமானபோது :பிரபோத் பாரிக்

பிரபோத் பாரிக்


Prabodh Parikh is a Gujarati poet, short fiction writer and visual artist. He retired recently as Head of the Department of Philosophy at Mithibai College, Mumbai. His book of poems, Kaunsman (Between Parentheses/In Brackets), published in 1993, is a significant collection in Gujarati literature, representing thirty years of work in poetry. It won him several awards, including the Best Poetry Collection of 1993-94 (Gujarat Sahitya Akademi) and the G.F. Saraf Award for Best Gujarati Book in 1992-95.




















பிரபல குஜராத்தி கவிஞர் உமாஷங்கர் ஜோஷி காலமானபோது எழுதியது 

நீங்கள் எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கினீர்கள்
நீங்களே அவற்றை ஈரமாக்கினீர்கள்
உங்கள் கொடையால் பூமியைப் பெருக்கெடுத்து ஓடச்செயதீர்கள்
கானகத்தின் ஊடே எங்களுக்கு நடக்கக் கற்பித்தீர்கள் ,
கானகத்தைக் கடக்கக் கற்பித்தீர்கள்
நீங்கள் தான்  உள்ளுக்குள்ளே மூடியிருக்கும் ஒளியின் கதவுகளைத் தட்டுகின்ற   மந்திரங்களை எங்கள் செவியில் கிசுகிசுத்தீர்கள்
இங்கே இருந்து அங்கே செல்கிற பாலத்தை
நீங்களே உருவாக்கினீர்கள்
நீங்களே எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கியவர்
நீங்களே அவற்றை ஈரப்பதமாக்கியவர்
பிரபோத் பாரிக்

 

Wednesday 13 November 2013

போஸ்ட்மார்டம்

போஸ்ட்மார்டம்
ஆங்கில மூலம் அமிதவ குமார்
மொழிபெயர்ப்பு: வையவன்
நர்ஸ் ஐந்து மணிக்கு வேலையை விட்டு வெளியேறினாள். செத்துப்போன பெண்மணியின் கணவன் வாசலருகே டாக்டர் அஹ்மத் நீங்கள் காத்திருக்கும்போது  என்று எழுதி மாட்டியிருந்த போர்டின் கீழ முழங்கை மூட்டுக்களை இரண்டு உள்ளங்கைகளும் மூடியிருக்க உட்கார்ந்திருந்தான். அவள் வெளியேறியதை அவன் பார்க்கவில்லை.  
மதிய உணவுக்குச் சற்று முன் ஆர்மி கேம்பிலிருந்து ஒரு வாகனம் வந்தது. ஒரு கறுத்த சோல்ஜர் இடது கையில் ஒரு சிறிய ரைபிளோடு வந்து கதவைத் தள்ளித் திறந்தான்.
  சிப்பாய் வந்தான் . .
கர்னல் வருகிறார் என்று அறிவித்தான். டாக்டர் அஹ்மத் தானாக எழுந்து நின்றுகொண்டார்.
வந்த கர்னல் பருத்திருந்தார். அவர் அமைதியாகக் காணப்பட்டார். அளவுக்கு மீறிய சுத்தத்தோடு , சேற்றிலே தங்கப் பச்சை நிறத்தில் மின்னும் தவளை போல . தன லத்தியை மேஜை மீது வைத்துவிட்டு
நர்ஸை அலுவலகத்தை விட்டு வெளியேறக் கட்டளை இட்டார்.
டாக்டர் அஹ்மத் மணி அடித்ததும்  மீண்டும் உள்ளே போனாள். உச்சித் தளத்தில் அவர்கள் வீட்டிலிருந்த அவர் மனைவி ஜாக்கியாவை அழைத்து வரச் சொன்னார். வழக்கமாக அவர் அவளை போனில் தான் கூப்பிடுவார். கர்னலின் கட்டளையை ஏந்தி   நர்ஸ் அவசரமாக அகன்றாள்.
ஜாக்கியா குழந்தை மருத்துவர். பெண்களிடம் தாய்ப்பால் கொடுக்குமாறு அறிவுரை சொல்வதில் தேர்ந்தவள் , ஆனால் தன்னை ஏன் போஸ்ட்மார்டம் செய்யச் சொல்கிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டாள்.
 சோல்ஜர்கள் ஆபேரஷன் அறையில் ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியேறினர் டாக்டர் வெள்ளைத் துணியை அகற்றியதும் அவள்  ஒரு சத்தம் போட்டுவிட்டு உரத்த குரலில் பாதியா ஓதத் தொடங்கினாள். பிரேத பரிசோதனையைத் தொடர்வது அவளுக்குக் கடினமாக இருந்தது. அவளுக்கு வளர்ந்த மகள் ஒருத்தி இருந்தாள்
பிறகு நர்ஸ்   சவமாயிருந்த பெண்ணோடு  தனியாக நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தாள் .ரத்தத்தையும் மற்ற கழிவுகளையும் சுத்தம் செய்து அவளுக்குத் தையல் போட்டாள்.வயிறும் தொடைகளும் பச்சை நிறமாகிவிட்டிருந்தன. அது எதிர்பார்த்தது தான். நாக்கிலும் உதட்டிலும் குறிப்பிடத்தக்க மாதிரி ஒரு வீக்கம் தெரிந்தது . ஈமச்சடங்கு முடியும் வரை உடல் தாங்குமா என்று சந்தேகப் பட்டாள். கல்லறைக்கு இந்த வெய்யிலில் ஊர்வலம் சென்றடைய ஒரு நாள் ஆகும். 
ஒரு வருஷத்துக்கு முன்னால் வடக்கே இருந்து வந்த டாக்டர் ஒருவர் தம்மிடம் கொண்டுவரப்பட்ட சவம் பலரால் கற்பழிக்கப் பட்டதாக
க்கண்டுபிடித்தார் .அது ஒரு தவறு, அந்தப் பெண்மணி வாடிக்கையாளர்களுக்காக பட்டாளத்துக்கு வருவது வழக்கம் என்றும் அதை அவள் கணவன் கண்டுபிடித்து அவளைக் கொன்றுவிட்டதாகவும் ஒரு கதை சொன்னார்கள்
அடைசல் மிக்க, வெதுவெதுப்பான  அந்த அறையில் தன பற்கள் கடகடப்பதை நர்ஸ் உணர்ந்தாள். 
அதை அடக்கிக் கொண்டு அவள் தன க்ளௌஸ் அணிந்த கையை நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் .பிறகு அவற்றை பிரார்த்தனை செய்வது போல் திருப்பி தன விரல்களின் மேல் படிந்திருந்த கறுத்த பிசுபிசுப்பான பொருளின் மீது படிந்திருந்த படிமத்தைப்பார்த்தாள்.
  எந்தப் பிழையும் நிகழவில்லை ; எனினும் அது கடினமான வேலை.டாக்டர் ஜாக்கியா குடும்பத்தாரிடம் அந்த உடல் மூன்று முறை கழுவப்பட்டதாக அநேகமாக  சொல்லக்கூடும் .அந்தப் பெண்கள் எது ஒழுங்குமுறையோ அதைச் செய்யச்சொல்லி வற்புறுத்தப் போவதில்லை. அவர்களை எப்படி அவளால் காப்பாற்ற முடியும்? நர்ஸிங் ஸ்கூலில் மேனி மீதுள்ள சிகரெட் சூடுகளை மறைக்கவோ அருந்த  முலைக்காம்புகளை த்தைக்கவோ யாரும் கற்றுத்தருவதில்லை.
அவள் முடிவாக அறையை விட்டு வெளியே வரும்போது ஹால் வழியில் ஒரு டஜன் சோல்ஜர்கள் நிற்பதைக்கண்டு அவள் திடுக்கிட்டாள் .மிக அருகே நின்றிருந்த ஒருவன் கண்ணைச் சந்தித்து இலேசாக கண்ணடித்தாள். ஆனால் அவன் அமைதியாக ஒரு அணிலைக் கொண்டு வந்து போட்ட நாய் மாதிரி கூச்சப் பட்டுக்கொண்டு நின்றான்.
ஆறு மணிக்கு தன சிறிய அறையில் டிவிக்கு முன் அவள் உட்கார்ந்திருந்தால். அங்கே அவள் இளம்பெண்ணாக திருமணப் போட்டோ ஒன்றில் நின்றிருந்தாள். செய்தி வாசிப்பவர் 26 மணி நேரமாகக் காணாமல் போயிருந்த இளம்பெண் ஒருத்தி சாக்கடையில் கண்டெடுக்கப் பட்டதாகக்கூறினார்.  இரவு நேரத்தில் அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று மோதியதாக செய்தி வாசிக்கப்பட்டது
 .

Friday 21 June 2013

தாகமும் தண்ணீரும்

தாகமும் தண்ணீரும்
தாகம் உள்ளோர் மட்டும் தான்
 தண்ணீர் தேடுகிறார்கள் என்பதில்லை;
தண்ணீர் கூட தாகம்
உள்ளோரைத்தேடுகிறது
-மௌலானா  ஜலாலுதீன் ரூமி
மொழிபெயர்ப்பு. வையவன்

அக்னி மழை பொழிந்தால்

அக்னி மழை பொழிந்தால்
அக்னி மழை பொழிந்தால்
நீ தண்ணீராகிவிடு

அது நீர்ப் பிரளயமாகுமானால்
நீ காற்றாகிவிடு

அது மாபெரும் வெள்ளமானால்
நீ ஆகாயமாகிவிடு

பின் அது சர்வ லோகங்களின் கடைசி கடைசி வெள்ளமானால்
நீ உன்னைத் துறந்துவிடு
மகாதேவன் ஆகி விடு
-அல்லம பிரபு
(கன்னடக்கவிதை)

Tuesday 18 June 2013

மிர்சா காலிப்


மிர்ஸா காலிப் 


From the book “Ghalib: Epistemologies of Elegance” by Azra Raza and Sara Suleri Goodyear.
Bazeecha-e-itfal hai duniya meray aage
Hota hai shab-o-roz tamasha meray aage
The world is a children’s playground before me
Night and Day, this theatre is enacted before me

Ek khel hai aurang-e-Suleman meray nazdeek
Ek baat hai aijaz-e-Masiha meray aage
For me the flying throne of Solomon is a game
And only talk, the miracles of Christ before me
Juz naam nahin surat-e-aalam mujhe manzoor
Juz waham nahin hasti-e-ashia meray aage
I acknowledge the face of the universe as only a name
The substance of reality is but superstition before me
Hota hai nihan gard mein sahra meray hote
Ghista hai jabeen khaak pe dariya meray aage
Next to me, the wilderness is shamed into hiding in dust
The servile river grovels in the dust before me
Mat pooch ke kya haal hai mera teray peechey
Tu dekh ke kya rang gait era meray aage
Do not ask what my condition is without you
Just look at your own comportment before me

நீயின்றி என் நிலை என்னவாகு மென்று கேட்காதே 
நீயே சற்றுபார், என் முன்னால் உன் சொந்த நடத்தையை 
Sach kahte ho khud bin-o-khud aara hoon, na kyun hoon
Baitha hai but-e-aaina seema meray aage
True, I appear consumed by the niceties of adornment, but of course
An idol mirrors my reflection before me
Phir dekhiye andaaz-e-gul afshaani-e-guftaar
Rakh de koi paimana-o-sahba meray aage
Then witness the blossoming manner of speech
Just place a decanter of wine before me
Nafrat ke gumaan guzre hai main rashk se guzra
Kyunkar kahoon lo naam na unka meray aage
I was presumed hostile where I am merely jealous
Why should I say do not take that name before me
Imaan mujhe roke hai jo kheenche hai mujhe kufr
Kaaba mere peechhe hai kalisa meray aage
Faith retards me, where idols lure me
Kaaba is behind me, the church is before me
Aashiq hoon pah mashooq farebi hai miraa kaam
Majnun ko bura kahti hai Laila meray aage
I desire, my craft is to seduce the desired
The beloved Laila insults the lover Majnun before me
Khush hote hai par wasl mein yun mar nahin jaate
Aai shab-e-hijran ki tamanna meray aage
Joy prevails, but union need not signal death
Yearnings of the dark night of my soul came before me
Hai mauj-zan ik qulzum-e-khoon kaash yahi ho
Aata hai abhi dekhiye kya kya meray aage
Tears of blood create oceans of blood, if only this were it
And yet, what unknown fates must I still behold before me
Go haath ko jumbish nahin aankhon mein toh dum hai
Rahne do abhi saaghar-o-meena meray aage
Even when hands have no movement, sight retains vitality
So leave the accoutrements of wine before me
Hum-pesha-o-hum-mashrab-o-humraaz hai mera
Ghalib ko bura kyun kaho achha meray aage
He is my comrade, my confidant, my fellow carouser
Do not speak ill of him, Ghalib is good before me